Saturday, December 4, 2010

அரட்டை - ராதா vs கண்ணன்

நான் எழுதிக்கொண்டிருக்கும் புதிய புதினம் “நிர்மலாவைக் கடப்பது”.  இதில் ராதா, கண்ணன் என இரண்டு பாத்திரங்கள் இடையிடையே வந்து நாவலில் வரும் பாத்திரங்கள் பற்றியும் சமூகம், கலை, அரசியல் நிகழ்வுகள் பற்றியும் பேசிக் கொள்வார்கள். இனி அவ்வவப்போது இவ்வலைப்பூவில் இவர்களின் அரட்டையைக் கேட்கலாம். (நிர்மலாவைக் கடப்பது சிக்கிமுக்கி இணைய இதழி்ல் www. chikkymukki.com தொடராக வருகிறது.)


ராதா : ஏய் அன்னைக்கு இஞ்சி, லெமன் எல்லாம் போட்டு ஒரு ஜுஸ் குடுத்தியே ரொம்ப         நல்லா இருந்துதுடா....வெளியில எங்க கண்ணா அது கிடைக்கும்.

கண்ணன்:  ஓ.. எல்லா டாஸ்மாக்குலயும் கிடைக்குமே!ராதா : u cheat... ஏய் அன்னைக்கு என்னதான் குடுத்தே.
கண்ணன்: அது மேஜிக் மொமன்ட்ஸ் ன்னு வோட்கா ராதா. அன்னைக்கு நீ குரங்கு மாதிரி எப்படி எல்லாம் குட்டி கரணம் அடிச்ச தெரியுமா?ராதா : ஓங்கூட பேசவே கூடாதுடா.. கோ டு ஹெல்.
கண்ணன்: சரி விடு ராதா... மழை எப்படி கொட்டி தீக்குது பாத்தியா!ராதா : அதை விடு... சேனல் 4 பார்த்தியா ஈழப் போரில் சிங்கள ராணுவம் புரிந்த அக்கிரமத்தை பார்த்து உலகமே திகைச்சிப் போச்சே
கண்ணன்: ஆமாம்பா, ஐ.நாவின் சிறப்புத் தூதர் கிறிஸ்டோபர் ஹேன்ஸ் கூட இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்லிருக்காரு.ராதா : ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியையே ரத்து செய்யிற அளவுக்கு உலகத் தமிழர்களின் எதிர்ப்பைப் பார்த்தியா? என்ன புண்ணியம், இங்க ராஜப்க்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.
கண்ணன்: அசிங்கப்பட்டு ஊர் வந்தா போதும்னு ஓடி வந்துட்டாரே.ராதா : ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பூதாகரமா ஆவுதே கவுனிச்சியா? ஆமாம், கவுனிச்சேன் நிரா ராடியா 50 ப்ளஸ்லயும் சும்மா கும்முன்னு இருக்காங்கல்ல.ராதா : ஒன்ன திருத்தவே முடியாது. அவுங்க பவர் புரோக்கர்ங்கறது தெரியும். இந்த டேப் விவகாரத்துல பத்திரிகை அறம் பேசுற ஆட்களோட வேஷம் கலஞ்சிருக்கு பாத்தியா?
கண்ணன்: நம்ம ஆட்களுக்கு இங்லீஷ் மீடியான்னாலே ஒரு கவர்ச்சிதான். நீ யார சொல்றராதா :  டி. வி மீடியாவுல மிரட்டிக்கிட்டிருக்கிற பர்கா தத்தும், மத்திய அரசுக்கு சாதகமா எழுதிகிட்டிருக்கிற வீர் சங்கவியையும் தான் சொல்றேன். 

கண்ணன்:மீடியா அதிகாரத்த வெச்சிகிட்டு பவர் புரோக்கரா மாறுவது ஒண்ணும் புதுசு இல்லையே. இங்க 'சோ' ல்லாம் இது மாதிரி ஆள் தானே.ராதா :  விக்கி லீக்ஸ் ரகசியங்கள் பத்திகிட்டு எரியுதே.
கண்ணன்: விடு, அமெரிக்கா அம்பலப்படட்டும்

ராதா : ஸ்பெக்ட்ரம்..

கண்ணன்: வேணாம், விட்டுடு.. நான் திராவிடன்.ராதா :  இல்லப்பா, இதுல காட்டுற ஆர்வத்த போபால் விஷவாயுப் பிரச்சினை, வடகிழக்கு மாநில காடுகளை கனிமங்களை எடுக்க வேதாந்தா மாதிரி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கறதுல அரசாங்கம் காட்டுற வேகம்.. இதபத்தியெல்லாம் பேசமாட்டேங்குறாங்களே
கண்ணன்: சரி.. கூல் டவுன். விஜய் அரசியலுக்கு வரப்போறாராமேராதா :  அதுக்குள்ளயா பீல்டவுட் ஆயிட்டாரு?
கண்ணன்: எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான். ஏய், அன்னைக்கு நீ என்னன்னல்லாம் செஞ்ச தெரியுமா? இன்னைக்கும் இஞ்சி சாறு பிழிஞ்சி எலுமிச்சை எசன்ஸ் போட்டு ஜுஸ் வேணுமா?ராதா :  u bleady bitch..

No comments:

Post a Comment